Translate

Thursday, 1 January 2015

இயற்கை மருத்துவம்

சிரசு (தலை) நீக்கி எப்போதும் குளிக்ககூடாது, ஏனெனில் உடலில் சேரக்கூடிய உஷ்ணம் தலைப்பகுதியில் சேமிக்கப்படுவதால் தேவையின்றி தலைவலி கண் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

குளியல் அறைக்குள் சென்று'' ஷவர்க்கு ''அடியில் நின்று நேராக தண்ணீரைத் தலைக்கு மேல் விழும்படிதான் இன்று எல்லோரும் குறிக்கிறாரகள். அல்லது பக்கவாட்டில் இருக்கும் தண்ணீரை சிறிய டப்பாவில் அள்ளி நேராக தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள் .. இந்த செயல் முற்றிலும் தவறானது.

தண்ணீரை கால் பாதங்களில் இருந்து படிப்படியாக ஊற்றிக் கொண்டே வரவேண்டும். இறுதியில் தான் தலையை நனைக்க வேண்டும். அப்பொழுது தான் உடலில் தங்கி இருக்கும் அதிகப்படியான அசுத்த உஷ்ணம் உடலுக்கு தீங்கு தராமல் முறையாக வெளியேறும்.

நமது முன்னோர்கள் ஆற்றில் குளிக்கும் போது முதலில் பாதம் மற்றும் கால்கள் என்று படிப்படியாக கழுத்து வ ரை வந்த பின்பு தான் தலை முழுகுவார்கள். இதனால் தான் ஆறில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

மிக மிக குளிர்ந்த நீரோ, அல்லது அதிக சூடான நீரோ குளிப்பதற்கு பயன் படுத்தகூடாது.சூடான நீரை குளிக்கப் பயன்படுத்துபவர்கள் தண்ணீரை சூடு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள், அவரவர்களின் சிறுநீரின் வெப்பம் எந்தளவிற்கு இருக்கின்றதோ. அந்த அளவில் தான் குளியலுக்கு பயன் படுத்தும் தண்ணீரின் சூடு இருக்க வேண்டும்.

குளித்த பின்பு துவட்டக்கூடாது ! உடலின் வெப்பத்தினாலேய தண்ணீர் தானாக உணர வேண்டும். சளி ஜலதோஷம் போன்றவை ஏற்படாது என்று இயற்கை வாழ்வியல் விதி கூறுகின்றது. (பறவைகள், விலங்குகள் தண்ணீரில் விழுந்து எழுந்தவுடன்''டவலை ''வைத்து துடைத்துக கொள்வதில்லை ) தனக்கு இருக்கும்''பிஸி ஷெட் யூலில்… ''குளளளிப்பதற்கே நேரமில்லை என்கிற பொழுது, இதில் உடல் தானாக காயிர வரைக்கும் நாள் எப்படி வெயிட் பண்ணமுடியுனு ? நினைக்கிற உங்க ''மைன்ட் வாய்ஸ்'' என்னால் நல்லா உணர முடிகிறது இருந்தாலும் வேறு வழியில்லை மகா ஜனங்களே! குளிக்கும் பொழுது நாம் பயன் படுத்தும் சோப்பும், சாம்பும் தவறு என்று நன்கு தெரிந்திருந்தாலும் , இயந்திர உலகில் இதையெல்லாம் கவுனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

வியர்வையின் நாற்றத்தையும், உடலின் நாற்றத்தையும் போக்குவதற்கு தான் நாம் முயற்சி செய்கிறோமே தவிர, நாற்றம் ஏன் ஏற்படுகின்றது என்று, எவரும் அறிய முற்படுவதில்லை.

உடலில் உட்புறம் ஆரோக்கியமாக, சுத்தமாக இருக்குமானால் வியர்வை நாற்றம், வாய்துர்நாற் ற மோ , சிறுநீரில் நெடி மற்றும் மல நாற்றம் இருப்பதில்லை.

குறைந்தபட்சமாக நீங்கள் வாங்கும் சோப்பின் மேல் சுற்றப்பட்டிருக்கும் உறையில், அச்சடிக்கபட்டிருக்கும் '' TFM''ன் சதவிகித அளவு, எந்தளவிற்கு அதிகமாக இருக்கின்றதோ எந்தளவிற்கு அது தரமானதாக இருக்கும் . ''TFM என்பது, அந்த சோப்பில் பயன் படுத்தப்பட்டிருக்கும் தாவர கொழுப்பின் அளவைக் குறிக்கிறது. குழந்தைகள் சோப்பில் TFM சதவீதம் அதிக அளவில் இருப்பதை கவனியுங்கள், அந்த சோப்பில் கண் எரிச்சல் இல்லை என்பதே அதன் தரத்திற்கு உத்திரவாதமாக இருக்கின்றது.

சீயக்காய் தூள் , பாசிப்பயறு மாவு, பலவிதமான மூலிகைகள் கலந்த குளியல் பொடி போன்றவை விற்பனைக்கு கிடைக்கத்தான் செய்கிறது அதை நாம் சரியாக பயன் படுத்துவதன் மூலம் தான் அதன் நன்்மைகளை முழுமையாக பெறமுடியும்.

மிகமுக்கியமாக நீங்கள் கவுனிக்க வேண்டியது. சாப்பிட்ட பின்பு குளிக்ககூடாது, ஏனெனில், உடல் முழுவதும் பரவி இருந்த, இரத்த மற்றும் பிரண ஓட்டம் சாப்பிட்டவுடன் வயிற்றுப் பகுதிக்கு வந்து விடுகிறது. குளிப்பதனால் இந்த செயல் அடைபடுகிறது, இதனால் அஜீரணம் ஏற்பட்டு உண்ட உணவு விஷமாக மாறக்கூடிய வாய்ப்பை பெறுகிறது.

வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்